Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய பிரதேசத்தில் புதிய வகை டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு

மத்திய பிரதேசத்தில் புதிய வகை டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு

By: Nagaraj Wed, 15 June 2022 2:46:02 PM

மத்திய பிரதேசத்தில் புதிய வகை டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு

மத்திய பிரேதம்: புதிய வகை டைனோசர் முட்டைகள்... மத்தியப் பிரதேச மாநிலத்தில் புதிய வகை டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தார் மாவட்டத்தில் உள்ள தேசிய பூங்காவில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர் . அப்போது டைட்டோனோசர் என்ற வகையான டைனோசர்களின் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இதில் தனித்துவமான சில புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன . நேச்சர் குரூப் என்ற இதழில் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியாகியுள்ளது . அதில் , தேசிய பூங்காவில் புதிய வகை டைனோசர் முட்டைகள் மொத்தம் 52 கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .

research,nest building,contents,dinosaur,discovery ,ஆராய்ச்சி, கூடு கட்டும், உள்ளிடவை, டைனோசர், கண்டுபிடிப்பு

அந்த கூடுகளில் ஒரு கூட்டில் 10 முட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது . இதில் இதுவரை இல்லாத வித்தியாசமான முட்டைகளும் அடக்கம் . இந்த வகை முட்டைகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு , அருகருகே வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை டைனோசர் முட்டைகளில் பார்த்திராத அம்சம் இது . முட்டைகளுக்குள் முட்டை இருக்கும் முறை பறவைகளில் தான் காணப்படுமே தவிர ஊர்வனவற்றில் இதுவரை காணப்பட்டது இல்லை .
எனவே , இந்த புதிய வகை கண்டுபிடிப்பு மூலம் டைனோசரின் இனப்பெருக்கம் , கூடு கட்டும் முறை உள்ளிட்டவை குறித்து புதிய வித ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :