Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிலவின் மேற்பரப்பில் புதைந்துள்ள எரிமலை கிரானைட் பாறை கண்டுபிடிப்பு

நிலவின் மேற்பரப்பில் புதைந்துள்ள எரிமலை கிரானைட் பாறை கண்டுபிடிப்பு

By: Nagaraj Mon, 10 July 2023 10:18:02 AM

நிலவின் மேற்பரப்பில் புதைந்துள்ள எரிமலை கிரானைட் பாறை கண்டுபிடிப்பு

அமெரிக்கா: நிலவில் புதைந்துள்ள பாறை... நிலவில் புதைந்துள்ள 50 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட பெரிய எரிமலை கிரானைட் பாறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூன்றரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் வெளியான தீக்குழம்புகள் குளிர்ச்சியடைந்து இந்த பாறை உருவாகியிருப்பதாகவும், ஆனால், அதிலிருந்து தற்போதும் வெப்பம் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

uranium,thorium,elements,high concentration,moon,surface ,யுரேனியம், தேரியம், தனிமங்கள், செறிவு அதிகம், சந்திரன், மேற்பரப்பு

நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள விஞ்ஞானிகள், சந்திரனின் மேற்பரப்பில் உள்ள மற்ற பாறைகளுடன் ஒப்பிடும்போது, கிரானைட் பாறையில் யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்க தனிமங்களின் செறிவு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags :
|