Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊராட்சி நிதியை முறைகேடு செய்ததாக ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம்

ஊராட்சி நிதியை முறைகேடு செய்ததாக ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம்

By: Nagaraj Mon, 06 June 2022 7:41:09 PM

ஊராட்சி நிதியை முறைகேடு செய்ததாக ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம்

அலங்காநல்லூர்: ஊராட்சித்தலைவர் பதவிநீக்கம்... அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஊராட்சி மன்ற நிதியை முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் திமுக ஊராட்சித் தலைவரை பதவிநீக்கம் செய்து மதுரை மாவட்ட கலெகடர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த சர்மிளாஜி என்பவர் இருந்து வருகிறார். இவர், ஊராட்சி மன்ற தலைவராக செயல்படத் தொடங்கிய 40 நாட்களில் ஊராட்சி நிதியை முறைகேடாக தனது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றி முறைகேடு செய்துள்ளதாகக் கூறி அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கருப்பசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனையடுத்து புகார் தொடர்பாக ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளாஜியிடம் விளக்கம் கேட்டடுள்ளனர். ஆனால், சர்மிளாஜி உரிய பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து வாடிப்பட்டி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கிராம நிதி பதிவேட்டை தணிக்கை செய்தனர். இதில் முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதியானது.

panchayat leader,dismissal,abuse,collector,action,action ,ஊராட்சித் தலைவர், பதவி நீக்கம், முறைகேடு, கலெக்டர், அதிரடி, நடவடிக்கை

இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து சர்மிளாஜி மோகனை பதவி நீக்கம் செய்ய ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டைமேடு ஊராட்சி தலைவர் பதவியிலிருந்து சர்மிளாஜியை நீக்கம் செய்து மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரித்திருந்த நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட திமுக ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|