Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ.யில் பதிவான வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ.யில் பதிவான வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

By: Karunakaran Thu, 23 July 2020 11:02:58 AM

டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ.யில் பதிவான வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுக்கு முன்பு பெங்களூரு, டெல்லியில் இவருக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது கணக்கில் வராத பல கோடி ரூபாய் சிக்கியது. இதுதொடர்பாக, டி.கே.சிவக்குமார், அவரது ஆதரவாளர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

டி.கே.சிவக்குமார் சட்டவிரோதமாக பணம் சேர்த்தது குறித்து சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்திருந்தது. மேலும், கர்நாடக அரசும் கடந்த ஆண்டுடி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

dk sivakumar,cbi,high court,petition ,டி.கே.சிவகுமார், சி.பி.ஐ., உயர் நீதிமன்றம், மனு

தற்போது டி.கே.சிவக்குமார் ஆதரவாளர் சசிகுமார் சிவண்ணா, டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ.யில் பதிவான வழக்கு மற்றும் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி, கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த மனு விசாரணை நடைபெற்றபோது, டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ.யில் பதிவான வழக்கு, கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி சசிகுமார் சிவண்ணா தாக்கல் செய்திருந்த மனுவை ஐகோர்ட்டு நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனால் டி.கே.சிவக்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


Tags :
|