Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நினைவேந்தலுக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

நினைவேந்தலுக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

By: Nagaraj Fri, 20 Nov 2020 8:45:57 PM

நினைவேந்தலுக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

தள்ளுபடி செய்யப்பட்ட மனு... யுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதாலும், மாவட்ட மேல் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதாலும் வழக்கை விசாரணை செய்ய முடியாதென குறிப்பிட்டு நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

health services,petition,discount,jaffna,commemoration ,சுகாதார சேவைகள், மனு, தள்ளுபடி, யாழ்ப்பாணம், நினைவேந்தல்

வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நீண்டநேர சமர்ப்பணங்களின் பின்னர் மன்று இதனை அறிவித்தது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Tags :
|