Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா அறிகுறி இல்லாத 400 பேர் விடுதிகளில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

கொரோனா அறிகுறி இல்லாத 400 பேர் விடுதிகளில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

By: Monisha Mon, 15 June 2020 6:25:50 PM

கொரோனா அறிகுறி இல்லாத 400 பேர் விடுதிகளில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது. நாகர்கோயில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 61 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு வருவோரால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, மும்பை பகுதிகளில் இருந்து வருகின்றவர்களால் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. அவ்வாறு வருகிறவர்கள் ஆரல்வாய்மொழி மற்றும் களியக்காவிளை சோதனைச் சாவடிகளில் பரிசோதனை செய்யப்பட்டு தங்கும் விடுதிகள், மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

tamil nadu,coronavirus,kanyakumari,virus,isolation ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,கன்னியாகுமரி,பரிசோதனை,தனிமைப்படுத்தல்

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று இரவு வரை ஒரே நாளில் வந்த 670 பேர் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் சோதனை செய்யப்பட்டு கன்னியாகுமரியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களை விடுதிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்த சுகாதாரத்துறையினர், இடம் நெருக்கடி காரணமாக ஏற்கெனவே விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லாததைத் தொடர்ந்து அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags :
|