Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீர்நிலைகளின் கரையோரம் கொட்டப்பட்ட கட்டட கழிவுகள் அகற்றம்

நீர்நிலைகளின் கரையோரம் கொட்டப்பட்ட கட்டட கழிவுகள் அகற்றம்

By: Nagaraj Mon, 25 July 2022 08:47:59 AM

நீர்நிலைகளின் கரையோரம் கொட்டப்பட்ட கட்டட கழிவுகள் அகற்றம்

சென்னை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை... சென்னையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒருபகுதியாக, நீர்நிலைகளின் கரையோரம், தீவிர துாய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. நீர்நிலைகளின் கரையோரம் சட்டவிரோத முறையில் கொட்டப்பட்டு தேங்கி கிடந்த, 1.28 லட்சம் கிலோ கட்டட கழிவுகள், அகற்றப்பட்டன. அத்துடன், கரை பகுதியில், 602 மரக்கன்றுகள் நடப்பட்டன.


இதனால், பருவமழை காலத்தில், நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரை துாய்மையாக வைத்திருக்கும் வகையில், மாநகர் முழுவதும் தீவிர துாய்மை பணி மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி, நீர்நிலைகள் அருகே கரை பகுதி மற்றும் நீர் வரத்து, போக்கு கால்வாயில் குவிந்து கிடந்த, கட்டட கழிவுகளை அகற்ற முடிவு செய்தது.

இப்படி செய்வதன் வாயிலாக, பருவமழையின் போது, மழை நீர் ஓட்டம் தடைப்பட்டு, வெ ள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூன் 6ம் தேதி முதல், 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில், மாநகர் முழுவதும், தீவிர துாய்மை பணி நடைபெற்று வருகிறது.

water bodies,canals,roads,flooding,action ,நீர்நிலைகள், வழித்தடங்கள், சாலைகள், வெள்ளப்பெருக்கு, நடவடிக்கை

மாநகரில் உள்ள பள்ளி வளாகம், வழிபாட்டு தலங்கள், பூங்கா, பேருந்து நிறுத்தம், வணிக வளாகங்கள், நீர்நிலை கரையோரம், பொதுக்கழிப்பிடம் அமைவிடங்களில் தனி கவனம் செலுத்தி துாய்மை பணி நடக்கிறது.மாநகராட்சி ஊழியர்களுடன், நலச்சங்கங்கள், தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் சேர்ந்து இந்த பணியை மேற்கொள்கின்றனர்.

நேற்றுமுன்தினம், 200 வார்டுகளில், நீர்நிலை அருகில் உள்ள திடக்கழிவுகள் மற்றும் கட்டட கழிவுகள் அகற்றப்பட்டன. குளம், ஏரி உட்பட, 298 நீர்நிலைகள் மற்றும் 166 இதர இடங்களில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.இதில், நீர்நிலைகள் அருகே, சட்ட விரோத முறையில் கொட்டப்பட்டு, நீர்நிலைகளை மாசுபடுத்தும் வகையிலும், மழை நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தும் வகையிலும் கிடந்த, 1.28 லட்சம் கிலோ கட்டட கழிவுகள் அகற்றப்பட்டன. அதே போல், மாநகரின் பிற பகுதிகளில் இருந்து, 1.92 லட்சம் கிலோகட்டட கழிவுகள்அகற்றப்பட்டன.

இதனால், வரும் பருவமழைக் காலத்தில், நீர் வழித்தடங்களில் நீரோட்டம் தடைப்பட்டு, சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Tags :
|
|