Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காலி செய்யப்பட்ட கொரோனா மையத்தில் இருந்த மெத்தைகள் பயோவேஸ்ட் முறையில் அழிப்பு

காலி செய்யப்பட்ட கொரோனா மையத்தில் இருந்த மெத்தைகள் பயோவேஸ்ட் முறையில் அழிப்பு

By: Nagaraj Wed, 09 Dec 2020 9:33:44 PM

காலி செய்யப்பட்ட கொரோனா மையத்தில் இருந்த மெத்தைகள் பயோவேஸ்ட் முறையில் அழிப்பு

பயோ வேஸ்ட் முறையில் அழிப்பு... நாகர்கோவிலில் கல்லூரிகளில் இயங்கிய கொரோனா வார்டுகள் காலி செய்யப்பட்டன. அங்கிருந்த மெத்தைகள், போர்வைகள் பயோ வேஸ்ட் முறையில் அழிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்த நேரங்களில் கல்வி நிறுவனங்களில் கொரோனா சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டு, நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதன்படி நாகர்கோவிலில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள தனியார் பள்ளி, கோணத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி ஆகியவற்றில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த செப்டம்பரில் இருந்து படிப்படியாக நோயாளிகள் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து இந்த சிறப்பு மையங்களில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை செய்யப்பட்டு இருந்ததால் இந்த மையங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

biowaste,clearing,corona,center,mattress,blankets ,பயோவேஸ்ட், அழிப்பு, கொரோனா, மையம், மெத்தை, போர்வைகள்

இந்த நிலையில் நோயின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் தமிழகத்தில் 3ம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதில் கோணம் பொறியியல் கல்லூரி, அரசு கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டி இருந்ததால் அவை திறக்கப்படாமல் இருந்தன. நேற்று மாநகராட்சி பணியாளர்கள் இரு கல்லூரிகளிலும் தூய்மை பணி மேற்கொண்டனர்.
ஆசாரிப்பள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியிலும் தூய்மை பணி நடக்க உள்ளது. இந்த 3 இடங்களிலும் பயன்படுத்தப்பட்ட சுமார் 950 மெத்தைகள், தலையணைகள் பயோ மெடிக்கல் முறையில் அழிக்கப்பட உள்ளன.
இதற்காக இவை லாரிகளில் ஏற்றப்பட்டு நாங்குநேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வகுப்பறைகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. கட்டில்கள் சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Tags :
|
|