Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் பணி துவங்கியது!

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் பணி துவங்கியது!

By: Monisha Fri, 16 Oct 2020 10:30:20 AM

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் பணி துவங்கியது!

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சில தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இதனையடுத்து ஜூலை மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மாதம் தனித்தேர்வர்களுடன் சேர்த்து விடுபட்ட மாணவ- மாணவிகளுக்கான பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்பட்டன.

மேலும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தேர்வு முடிவுகளும் சமீபத்தில் வெளியானது. இதனால், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் பணி, அவர்கள் படித்த பள்ளிகளிலேயே நடந்தது.

original mark certificate,plus 1,plus 2,students,schools ,அசல் மதிப்பெண் சான்றிதழ்,பிளஸ் 1, பிளஸ் 2,மாணவர்கள்,பள்ளிகள்

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வினை 34 ஆயிரம் மாணவர்களும், பிளஸ்-1 தேர்வினை 32 ஆயிரம் பேரும் எழுதி தேர்ச்சி பெற்றிருந்தனர். மாணவ, மாணவிகள் நேற்று தாங்கள் படித்த பள்ளிகளிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றனர். ஒரே பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு இரு வகுப்புகளுக்கான அசல் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மாணவிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு பெஞ்சுக்கு 2 பேர் வீதம் அமர வைக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் அசல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளு க்கு அந்தந்த பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அவர்களின் மதிப்பெண் சான்றிதழ் பதிவு செய்யப்பட்டு, அதற்கான அத்தாட்சி கடிதம் வழங்கப்பட்டது.

Tags :
|
|