Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 5 மாநிலங்களுக்கு 20000 ரெம்டெசிவர் ஊசி மருந்துகள் விநியோகம்

5 மாநிலங்களுக்கு 20000 ரெம்டெசிவர் ஊசி மருந்துகள் விநியோகம்

By: Nagaraj Thu, 25 June 2020 8:58:35 PM

5 மாநிலங்களுக்கு 20000 ரெம்டெசிவர் ஊசி மருந்துகள் விநியோகம்

5 மாநிலங்களுக்கு முதற் கட்டமாக 20000 ரெம்டெசிவர் ஊசி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா அவசர சிகிச்சை மருந்தான ரெம்டெசிவர் ஊசி மருந்தை, இந்தியாவில் கோவிஃபார் என்ற பெயரில் தயாரித்துள்ள ஐதராபாத் ஹெட்டரோ நிறுவனம், முதற் கட்டமாக 20000 ஊசி மருந்துகளை, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

cipla,india,manufacturing,remedy,injections ,சிப்லா, இந்தியா, உற்பத்தி, ரெம்டெசிவர், ஊசி மருந்துகள்

ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு, கட்டுப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சையாக குறைந்தது தலா 6 ஊசிகளை போட வேண்டும். 100 மில்லி கோவிஃபார் ஊசி மருந்தின் விலை 5000 ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.
அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் சுமார் ஒரு லட்சம் ஊசி மருந்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள ஹெட்டரோ, அடுத்த கட்டமாக கொல்கத்தா, போபால், லக்னோ, பாட்னா, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதே மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய மற்றோர் பெரிய மருந்து நிறுவனமான சிப்லாவும் அனுமதி பெற்றுள்ளது.

Tags :
|
|
|