Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் விநியோகம் நிறுத்தம் - தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் விநியோகம் நிறுத்தம் - தேவஸ்தானம் அறிவிப்பு

By: Karunakaran Tue, 21 July 2020 11:25:02 AM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் விநியோகம் நிறுத்தம் - தேவஸ்தானம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

50 அர்ச்சகர்களில் 15 பேர் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என மொத்தம் 170 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தற்போது ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

devasthanam,tirupati ezhumalayan temple,darshan tickets,coronavirus ,தேவஸ்தனம், திருப்பதி ஏழுமலையான் கோயில், தரிசனம் டிக்கெட், கொரோனா வைரஸ்

ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயங்காருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக கவுன்டர்களில் டிக்கெட் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆன்லைனில் மட்டுமே திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :