Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வினியோகம்

நாளை முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வினியோகம்

By: Monisha Thu, 23 July 2020 3:46:32 PM

நாளை முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வினியோகம்

பிளஸ்-2 பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்குதல் தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் மு.பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

பிளஸ்-2 பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகிற 24-ந்தேதி (நாளை) முதல் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பதிவுசெய்ய விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவேண்டும்.

mark list,plus 2,students,revaluation,examination ,மதிப்பெண் பட்டியல்,பிளஸ்2,மாணவர்கள்,மறுமதிப்பீடூ,தேர்வுத்துறை

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் பாடங்களுக்கு தற்போது மறுகூட்டலோ, மறுமதிப்பீட்டுக்கோ விண்ணப்பிக்கக்கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே அதற்கான வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாள் நகல் தேவையில்லை எனில், மாணவர் விரும்பினால் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-1 அரியர் தேர்வு எழுதியவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விவரங்களை சரிபார்த்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வருகிற 24-ந்தேதி (நாளை) முதல் 30-ந்தேதி வரை மாணவர்களுக்கு வினியோகிக்க வேண்டும். தனித்தேர்வர்களுக்கு அவர் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.

Tags :
|