Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை தடுக்க மக்களுக்கு பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம்

கொரோனாவை தடுக்க மக்களுக்கு பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம்

By: Karunakaran Sun, 13 Sept 2020 09:23:45 AM

கொரோனாவை தடுக்க மக்களுக்கு பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ரஷியாவில் ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, கொரோனாவை தடுக்க மக்களுக்கு பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை ரஷியா முறைப்படி பதிவு செய்துள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையின்போது, 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்படுகிறது.

russian vaccine,corona virus,corona death,corona prevalence ,ரஷ்ய தடுப்பூசி, கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் தடுப்பதற்கு மக்கள் பயன்பாட்டுக்காக இந்த தடுப்பூசியின் வினியோகம் தொடங்கியுள்ளது. இதனை ரஷிய சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுகுறித்து ரஷிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் முதல் தொகுதி ரஷிய பிராந்தியங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், முதல் வினியோகமானது, தடுப்பூசியை பரவலாக்கும். மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதலில் போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. உலகிலேயே ரஷியாவில்தான் கொரோனா தடுப்பூசி முதன்முதலாக மக்கள் பயன்பாட்டுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :