Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செங்கல்பட்டில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

By: vaithegi Fri, 01 July 2022 12:22:29 PM

செங்கல்பட்டில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


செங்கல்பட்டு: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் அதிக அளவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அறிவித்துள்ளார்.

அதாவது, கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதலாக கொரோனா படுக்கைகளை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், மாவட்டம் முழுக்க கொரோனா கேர் மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழகத்தில் பலரும் கொரோனா இரண்டு தவணைத் தடுப்பூசியையும் செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

district collector,corona ,மாவட்ட ஆட்சியர் ,கொரோனா

இன்னும் தேவைப்பட்டால் கொரோனா கேர் மையங்களை அதிகரிக்க இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பரவல் வெகு விரைவாக பரவிக் கொண்டிருப்பதை மனதில் கொண்டு அனைவரும் இந்த கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றும்படி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெரும்பாலும் முறையாக முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை பொது இடங்களில் பின்பற்றினாலே ஓரளவுக்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :