Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் போதை தடுப்பு குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் போதை தடுப்பு குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

By: vaithegi Tue, 28 June 2022 12:40:20 PM

நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் போதை தடுப்பு குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருநெல்வேலி : 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் கடந்த கல்வியாண்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த கல்வி ஆண்டு தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்துள்ளது.

இந்த கல்வியாண்டு முதல் மாணவர்களின் கல்வித் திறனில் முக்கிய பங்கு வகிக்கும்படி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

nellai district,drug prevention committee ,நெல்லை மாவட்டம்,போதை தடுப்பு குழு

பொதுவாக மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போதே போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அதாவது, சிகரெட், குடிப்பழக்கம் என கெட்ட வழியில் சென்று கொண்டிருக்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில் தமிழகத்திலேயே முதன் முறையாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதை தடுப்பு குழு அமைக்கப்படும் என நெல்லை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதே போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் போதை தடுப்பு குழு அமைக்கலாம் என பெற்றோர்கள் சார்ப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags :