Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியையிடம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அதிகாரி கையும்களவுமாக கைது

ஆசிரியையிடம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அதிகாரி கையும்களவுமாக கைது

By: Monisha Tue, 09 June 2020 11:26:00 AM

ஆசிரியையிடம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அதிகாரி கையும்களவுமாக கைது

நிலுவையில் உள்ள சம்பளத்தொகை மற்றும் பணப்பலன்கள் கிடைக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்ட மாவட்ட கல்வி அதிகாரி கைது செய்யப்பட்டார். அது குறித்த முழுவிபரம் வருமாறு:-

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் டேஸ்மி கிறிஷ்டினா. இவர் வடமதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் திண்டுக்கல் முத்தழகுபட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் மற்றும் பணப்பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே அவர் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தார். ஆனால் அவருக்கு சம்பளம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட கல்வி அதிகாரி சுப்பிரமணியிடம் (வயது 57) இதுகுறித்து டேஸ்மி கிறிஷ்டினா புகார் தெரிவித்தார்.

bribery,district education officer,arrest,bribery cops ,லஞ்சம்,மாவட்ட கல்வி அதிகாரி,கைது,லஞ்ச ஒழிப்பு போலீசார்

அப்போது அவர், உங்களுக்கு சேர வேண்டிய சம்பளத்தொகை மற்றும் பணப்பலன்கள் கிடைக்க வேண்டும் என்றால், தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த டேஸ்மி கிறிஷ்டினா இதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரியை கையும்களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ஆசிரியையிடம் ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்திற்கான நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர். அந்த பணத்தை மாவட்ட கல்வி அதிகாரியிடம் கொடுக்கும்படி கூறினர்.

இதற்கிடையில் நேற்று திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி சுப்பிரமணி ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஆசிரியை டேஸ்மி கிறிஷ்டினா தான் கொண்டு வந்த ரூ.5 ஆயிரத்தை சுப்பிரமணியிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Tags :
|