Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

By: vaithegi Wed, 17 May 2023 09:46:37 AM

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அதிமுக என்னும் மாபெரும் கழகத்திலிருந்து ஓ. பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி அந்த கட்சியின் பொதுச்செயலாளராக வலம் வருகிறார்.

இதையடுத்து இச்சூழலில் ஓ. பன்னீர்செல்வம் , அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அண்மையில் சந்தித்து இருவரும் இணைந்து செயல்பட போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.

district secretaries meeting,aiadmk ,மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ,அதிமுக

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் , பூத் கமிட்டிகள் பற்றி விவாதிக்கலாம் தகவல் வெளியாகிறது .

ஆனால் அதே சமயம் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஒன்றிணைந்துள்ள இந்த அரசியல் சூழல் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Tags :