Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Fri, 25 Sept 2020 09:44:52 AM

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 5 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 470 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 76 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 145
செங்கல்பட்டு - 2,382
சென்னை - 9,938
கோவை - 4,655
கடலூர் - 1,807
தர்மபுரி - 1,141
திண்டுக்கல் - 591
ஈரோடு - 1,129
கள்ளக்குறிச்சி - 618
காஞ்சிபுரம் - 1,288
கன்னியாகுமரி - 819
கரூர் - 510
கிருஷ்ணகிரி - 795
மதுரை - 754
நாகை - 717
நாமக்கல் - 937
நீலகிரி - 736
பெரம்பலூர் - 120
புதுக்கோட்டை - 822
ராமநாதபுரம் - 194
ராணிப்பேட்டை - 549
சேலம் - 2,448
சிவகங்கை - 298
தென்காசி - 541
தஞ்சாவூர் - 1,344
தேனி - 504
திருப்பத்தூர் - 639
திருவள்ளூர் - 1,660
திருவண்ணாமலை - 1,010
திருவாரூர் - 901
தூத்துக்குடி - 729
திருநெல்வேலி - 947
திருப்பூர் - 1,677
திருச்சி - 848
வேலூர் - 931
விழுப்புரம் - 903
விருதுநகர் - 322
விமானநிலைய கண்காணிப்பு - 54
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

Tags :