Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 ஆயிரத்து 239 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 ஆயிரத்து 239 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Wed, 14 Oct 2020 10:12:17 AM

தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 ஆயிரத்து 239 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 4 ஆயிரத்து 666 பேருக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 ஆயிரத்து 239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 117 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,treatment,infection,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,சிகிச்சை,பாதிப்பு,பலி

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-

அரியலூர் - 255
செங்கல்பட்டு - 2,066
சென்னை - 13,704
கோவை - 4,764
கடலூர் - 1,082
தர்மபுரி - 807
திண்டுக்கல் - 390
ஈரோடு - 1,032
கள்ளக்குறிச்சி - 318
காஞ்சிபுரம் - 818
கன்னியாகுமரி - 768
கரூர் - 409
கிருஷ்ணகிரி - 796
மதுரை - 793
நாகை - 526
நாமக்கல் - 1,062
நீலகிரி - 727
பெரம்பலூர் - 82
புதுக்கோட்டை - 507
ராமநாதபுரம் - 186
ராணிப்பேட்டை - 370
சேலம் - 2,269
சிவகங்கை - 180
தென்காசி - 190
தஞ்சாவூர் - 727
தேனி - 440
திருப்பத்தூர் - 423
திருவள்ளூர் - 1,512
திருவண்ணாமலை - 696
திருவாரூர் - 638
தூத்துக்குடி - 535
திருநெல்வேலி - 677
திருப்பூர் - 1,329
திருச்சி - 634
வேலூர் - 728
விழுப்புரம் - 520
விருதுநகர் - 262
விமானநிலைய கண்காணிப்பு - 17

Tags :