Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாவட்ட வாரியாக புதிதாக கொரோனா பரவியவர்கள் குறித்து வெளியான தகவல்!

மாவட்ட வாரியாக புதிதாக கொரோனா பரவியவர்கள் குறித்து வெளியான தகவல்!

By: Monisha Fri, 19 June 2020 11:03:52 AM

மாவட்ட வாரியாக புதிதாக கொரோனா பரவியவர்கள் குறித்து வெளியான தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 2 ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 2 ஆயிரத்து 91 பேர். விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 10 பேர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 6 பேர். ரெயில் நிலைய கண்காணிப்பில் 5 பேர். எஞ்சிய 29 பேர் சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்கள் ஆகும்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 21 ஆயிரத்து 990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 28 ஆயிரத்து 641 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 625 பேர் உயிரிழந்துள்ளனர்.

coronavirus virus,tamil nadu,vulnerability,death,chennai ,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,பாதிப்பு,உயிரிழப்பு,சென்னை

மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 3
செங்கல்பட்டு - 115
சென்னை - 1,373
கோவை - 23
கடலூர் - 17
தர்மபுரி - 2
திண்டுக்கல் - 2
ஈரோடு - 3
கள்ளக்குறிச்சி - 3
காஞ்சிபுரம் - 55
கன்னியாகுமரி - 10
கரூர் - 3
மதுரை - 9
நாகை - 9
நீலகிரி - 4
புதுக்கோட்டை - 6

coronavirus virus,tamil nadu,vulnerability,death,chennai ,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,பாதிப்பு,உயிரிழப்பு,சென்னை

ராமநாதபுரம் - 28
ராணிப்பேட்டை - 18
சேலம் - 14
சிவகங்கை - 15
தென்காசி - 33
தஞ்சாவூர் - 21
தேனி - 6
திருப்பத்தூர் - 4
திருவள்ளூர் - 123
திருவண்ணாமலை - 27
திருவாரூர் - 8
தூத்துக்குடி - 26
திருநெல்வேலி - 19
திருப்பூர் - 4
திருச்சி - 14
வேலூர் - 55
விழுப்புரம் - 26
விருதுநகர் - 13

Tags :
|