Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் தமிழ் குடும்பத்தினர் ஒன்றிணைந்து நடத்திய தீபாவளி கொண்டாட்டம்

அமெரிக்காவில் தமிழ் குடும்பத்தினர் ஒன்றிணைந்து நடத்திய தீபாவளி கொண்டாட்டம்

By: Nagaraj Mon, 31 Oct 2022 10:48:25 PM

அமெரிக்காவில் தமிழ் குடும்பத்தினர் ஒன்றிணைந்து நடத்திய தீபாவளி கொண்டாட்டம்

அமெரிக்கா: தீபாவளி கொண்டாட்டம்... அமெரிக்காவில் வசித்து வரும் தமிழ் குடும்பத்தினர் ஒன்றிணைந்து இசை நிகழ்ச்சியுடன் பாரம்பரிய முறைப்படி தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

அமெரிக்காவின் மான்டேகா கலிபோர்னியாவில் வசித்து வரும் தமிழர்கள் சார்பில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. 150க்கும் அதிகமான தமிழர்கள் நண்பர்களாக ஒன்றுகூடி தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

விழாவில் இசை நிகழ்ச்சி நடந்தது. வயலின், பியானோ வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் நடனமாடினர். அத்துடன் வீட்டில் அனைவரும் விதவிதமாக உணவுகள், இனிப்புகள் தயாரித்து கொண்டு வந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து ஒற்றுமையை உணர்த்தும் வகையில் தீபாவளியை கொண்டாடினர்.

america,tamil tradition,diwali,celebration,boys,girls ,
அமெரிக்கா, தமிழ் பராம்பரியம், தீபாவளி, கொண்டாட்டம், சிறுவர், சிறுமிகள்

இந்த கொண்டாட்டம் 6 மணிநேரம் வரை சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் அனைவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து பங்கேற்றனர். இந்த கொண்டாட்டத்தின்போது குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்கு தமிழ் பாரம்பரியம், கலாசாரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

அமெரிக்காவில் வசித்தாலும் கூட தமிழ்,பாரம்பரியத்தை மறக்காமல் பின்பற்றும் வகையில் இந்த தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது

Tags :
|
|