தீபாவளி கொண்டாட்ட வழிபாடு... தீபாவளி கொண்டாட்ட வழிபாடு பங்கேற்றார்
By: Nagaraj Sat, 29 Oct 2022 08:01:15 AM
கனடா: வழிபாடுகளில் பங்கேற்றார்... ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் போர்ட் ரொறன்ரோவில் அமைந்துள்ள பாப்ஸ் ஶ்ரீ சத்தியநாராயணன் ஆலயத்தில் இடம்பெற்ற தீபாவளி கொண்டாட்ட வழிபாடுகளுக்கு தனது இந்து உறுப்பினர்கள் சகிதம் சென்று பங்கேற்றார்.
ஆலய வளாகத்தில் அறங்காவல் சபையினரால் வரவேற்கப்பெற்ற முதல்வரும் சபை உறுப்பினர்களும் பின்னர் ஆலய மண்டபத்தில் பக்தர்கள் மத்தியில் உரையாற்றினர்.
அவர்களின் தமிழ் பேசும் இந்து மாகாண சபை உறுப்பினரான லோகன் கணபதியும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு
உரையாற்றிய முதல்வர் டக்போர்ட் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள இந்து
ஆலயங்களும் அதன் நிர்வாகிகளும் மக்களும் மதம் சார்ந்த பண்பாட்டு
முறைகளினால் மாகாணத்தின் வளர்ச்சிக்கும், வளத்திற்கும் பலமாக
விளங்குகின்றார்கள் என்று புகழாரம் சூட்டினார்.