Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடெங்கும் தீபாவளி திருநாள் வெடிகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்

நாடெங்கும் தீபாவளி திருநாள் வெடிகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்

By: Nagaraj Sun, 12 Nov 2023 7:46:34 PM

நாடெங்கும் தீபாவளி திருநாள் வெடிகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்

புதுடில்லி: நாடெங்கும் தீபாவளித் திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகள்தோறும் தீபங்களை ஏற்றியும், புத்தாடை அணிந்து பட்டாசுகளை கொளுத்தியும் இந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளியைக் கொண்டுவரும் நாள்தான் தீபாஒளித் திருநாள். தீமையை அழித்து மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் நாள் தீபாவளிப் பண்டிகையாகும்.

திருமால், கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனைக் கொன்ற நாளை, நரகாசுரன் இறுதி ஆசைப்படி தீபாவளி எனக் கொண்டாடப்படுவதாக கூறுகிறது புராண வரலாறு.

diwali,cheers,celebration,greetings,newlyweds ,தீபாவளி, உற்சாகம், கொண்டாட்டம், வாழ்த்துக்கள், புதுமண தம்பதிகள்

தீபாவளிப் பண்டிகையொட்டி, வீடுகளில் இன்று அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய்க் குளியல் மேற்கொண்டு புத்தாடை உடுத்தி இறைவனையும், மூத்தவர்களையும் வணங்கினர். பட்டாசு வெடித்தும், மத்தாப்பு கொளுத்தியும் சிறுவர்களும் பெரியவர்களும் அளவில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வீட்டில் உள்ளவர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் நண்பர்களுக்கும் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நேரிலும் தொலைபேசியிலும், இணையதள வாயிலாகவும் தீபாவளி வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். புதுமணத் தம்பதிகள் தலைதீபாவளியை குடும்பத்தோடு உற்சாகமாக கொண்டாடினர்.

Tags :
|
|