Advertisement

தீபாவளி பண்டிகை .. சிறப்பு ரயில்கள் இயக்கம்

By: vaithegi Wed, 05 Oct 2022 7:12:05 PM

தீபாவளி பண்டிகை  ..   சிறப்பு ரயில்கள்  இயக்கம்

சென்னை: சிறப்பு ரயில்கள் இயக்கம் ... தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக கூடுதலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.இதையடுத்து சேலம் கோட்டம் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை-உத்தரப்பிரதேசம் மாநிலம் கோராக்பூர் இடையிலான சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள்து.

இதனை அடுத்து இச்சிறப்பு ரயிலானது அக்டோபர் 11ம் தேதி மற்றும் நவம்பர் 8ம் தேதி வரை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் கோவையில் இருந்து அக்டோபர் 11ம் தேதி அன்று காலை 4.40 மணிக்கு புறப்பட்டு 3வது நாள் காலை கோரக்பூரை சென்றடைகிறது.

special trains,diwali ,சிறப்பு ரயில்கள்  ,தீபாவளி

இதே போன்று கோராக்பூர் – கோவை இடையிலான சிறப்பு ரயில் வருகிற 8ம் தேதி முதல் நவம்பர் மாதம் 5ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் ஆனது கோரக்பூரில் இருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு 3வது நாள் காலை 7.25 மணிக்கு கோவைக்கு வந்தடைகிறது.

மேலும் இச்சிறப்பு ரயில் நெல்லூர், விஜயவாடா, நாக்பூர், போபால், கான்பூர் சென்ட்ரல், கஹளிலபாத், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :