Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி ...ஆம்னி பேருந்துகளில் புதிய கட்டண விவரம் வெளியீடு

தீபாவளி ...ஆம்னி பேருந்துகளில் புதிய கட்டண விவரம் வெளியீடு

By: vaithegi Sun, 29 Oct 2023 07:06:32 AM

தீபாவளி ...ஆம்னி பேருந்துகளில் புதிய கட்டண விவரம் வெளியீடு

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் 5 சதவீதம் குறைப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. கடந்தாண்டு 25% மற்றும் இந்தாண்டு 5% என்று 2 ஆண்டுகளில் 30 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அமைச்சர் சிவசங்கர்,

ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் எனவும் கூறியிருந்தார். நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச தொகையைவிட அதிகம் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

fare details,diwali,omni bus , கட்டண விவரம் ,தீபாவளி ,ஆம்னி பேருந்து


இந்த நிலையில் சென்னை-நாகர்கோவில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,211, அதிகபட்ச கட்டணம் ரூ.3,765 என்றும், சென்னை-நெல்லை குறைந்தபட்ச கட்டணம் ரூ.1960, அதிகபட்ச கட்டணம் ரூ.3,268 ஆகவும், சென்னை -மதுரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,363, அதிகபட்ச கட்டணம் ரூ.1,895 என்றும், சென்னை-திருச்சி குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,325, அதிகபட்ச கட்டணம் ரூ.1,841 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து சென்னை - கோவை இடையே குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,725, அதிகபட்ச கட்டணமாக ரூ.2,874 என்றும், சென்னை சேலம் இடையே ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,363, அதிகபட்ச கட்டண்ம ரூ.1895 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை - தஞ்சாவூர் அதிகபட்ச கட்டணம் ரூ.1,829 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Tags :
|