Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த தீபாவளி ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள்

சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த தீபாவளி ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள்

By: vaithegi Wed, 12 July 2023 11:12:56 AM

சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த தீபாவளி ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள்

சென்னை: நவம்பர் 9ம் தேதிக்கான ரயில் டிக்கெட்கள் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தன .... பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு 120 நாட்களுக்கு முன்னரே ரயில் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கும். இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் ரயில் டிக்கெட் கவுண்ட்டர்களில் தொடங்கியது. மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் காலை 10 மணி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

இதையடுத்து இன்று முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ந்தேதியும், 13-ந்தேதியில் முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10-ந்தேதியும், 14-ந்தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 11-ந்தேதியும், 15-ந்தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 12-ந்தேதியும் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tickets,diwali,train ,டிக்கெட்டுகள்,தீபாவளி ,ரயில்


இந்த நிலையில் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களுக்குள்ளாக மதுரை செல்லும் பாண்டியன் மற்றும் திருநெல்வேலி செல்லும் நெல்லை விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. எனவே இதனையொட்டி கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை ஒன்றை விடுத்து உள்ளனர்.

மேலும், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கான செல்லக்கூடிய விரைவு ரயில்களில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்களின் 2-ம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட்டுகளும் விற்பனை தொடங்கிய 10 நிமிடத்திற்குள்ளாக விற்று தீர்ந்தன.

Tags :
|