Advertisement

தீபாவளி .. ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது

By: vaithegi Wed, 12 July 2023 10:19:53 AM

தீபாவளி ..  ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது

சென்னை: பண்டிகை காலங்கள் என்றால் பொதுவாக அனைத்து தரப்பு மக்களும் சொந்த ஊர்களில் உறவுகளுடன் கொண்டாட விரும்புவர். அதிலும் குறிப்பாக, தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றால் ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர்.

இதனால் ரயில்கள், பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதிலும் ரயில்களை பொறுத்தவரை 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும்.

train ticket booking,diwali , ரயில் டிக்கெட் முன்பதிவு ,தீபாவளி

இதையடுத்து இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. காலை 8 மணி முதல் ரயில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் நாளை முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ந்தேதியும், 13-ந்தேதியில் முன்பதிவு செய்தால் நவம்பர் 10-ந்தேதியும், 14-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 11-ந்தேதியும், 15-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 12-ந்தேதியும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இம்முறை ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் தீபாவளி பண்டிகை வருவதால் வியாழக்கிழமை நாளில் இருந்தே பயணிகள் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் விரைந்து முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :