Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாய மசோதாக்களை எதிர்த்து திமுக, கூட்டணி கட்சிகள் போராட்டம்

விவசாய மசோதாக்களை எதிர்த்து திமுக, கூட்டணி கட்சிகள் போராட்டம்

By: Nagaraj Mon, 28 Sept 2020 12:14:35 PM

விவசாய மசோதாக்களை எதிர்த்து திமுக, கூட்டணி கட்சிகள் போராட்டம்

திமுக கூட்டணி போராட்டம்... விவசாய சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராட்டம நடத்துகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறியது.

dmk struggle,agricultural bill,kanchipuram,arivalayam ,திமுக போராட்டம், விவசாய மசோதா, காஞ்சிபுரம், அறிவாலயம்

இவை விவசாயிகளுக்கு எதிரானது என பாஜக கூட்டணி கட்சியிலிருந்த சிரோமணி அகாலி தளம் கூட்டணியிலிருந்து வெளியேறியது. இந்த விவசாய சட்டத்திற்கு தமிழகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதையடுத்து கடந்த வாரம் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

அப்போது செப்டம்பர் 28ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் இன்று நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் நடைபெறும் போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Tags :