Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வு .. தமிழகம் முழுவதும் இன்று திமுக உண்ணாவிரதப் போராட்டம்

நீட் தேர்வு .. தமிழகம் முழுவதும் இன்று திமுக உண்ணாவிரதப் போராட்டம்

By: vaithegi Sun, 20 Aug 2023 09:47:31 AM

நீட் தேர்வு    ..  தமிழகம் முழுவதும் இன்று திமுக உண்ணாவிரதப் போராட்டம்


சென்னை: நீட் தோ்வை தடை செய்யாத மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் இன்று உண்ணாவிரதம் நடக்க உள்ள நிலையில் மதுரையில் மாற்றப்பட்டு உள்ளது.

அதிமுக மாநாடு நடைபெற உள்ள நிலையில் பழங்காநத்தம் ரவுண்டானா அருகே நாளை நடைபெறயிருந்த திமுக உண்ணாவிரதம் வருகிற 23-ம் தேதிக்கு மாற்றம் செய்யபட்டு உள்ளது. பிரதான எதிர்க்கட்சி மாநாடு நடத்துவதால், ஜனநாயகத்தைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்படுவதாக திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி அறிவித்து உள்ளது.

dmk,hunger strike,neet exam ,திமுக ,உண்ணாவிரதப் போராட்டம் ,நீட் தேர்வு

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்தை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைக்கவுள்ளார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.

Tags :
|