Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும்முன் காக்கும் அரசாக திமுக செயல்பட்டு வருகிறது .. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

வரும்முன் காக்கும் அரசாக திமுக செயல்பட்டு வருகிறது .. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

By: vaithegi Fri, 03 Mar 2023 2:27:29 PM

வரும்முன் காக்கும் அரசாக திமுக செயல்பட்டு வருகிறது   ..  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: திமுக அரசு வரும்முன் காக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது .... தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் குழுவின் தலைவரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. தலைமை செயலக கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, சவுமியா சாமிநாதன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

chief minister,dmk ,முதலமைச்சர் ,திமுக

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், வெள்ளம், புயல் கியா இயற்கை சீற்றங்களை கையாளவது போன்று வெப்ப அலைகளையும் கையாள தயாராக வேண்டும்.

அதைத்தொடர்ந்து வளர்ச்சிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல வளர்ச்சியும் காலநிலை மாற்றம் இரு கண்களை போன்றது. திமுக அரசு வரும்முன் காக்கும் அரசாக செயல்பட்டு கொண்டு வருகிறது.

மேலும் கடல் அரிப்பைத் தடுக்க பனைமரம் நடும் திட்டம் தொடங்கப்படும்; காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags :