Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

By: Monisha Wed, 27 May 2020 09:30:03 AM

ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமாக இருந்தவர் ஆறுமுகன் தொண்டமான். 56 வயதாகும் இவர் ஆபத்தான நிலையில் தலங்கமாவில் உள்ள மருத்துவனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிட்சை பலனிற்றி காலமானார். எங்களால் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவனை நிர்வாகம் தெரிவித்தது.

ஆறுமுகன் தொண்டமான் 1964-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி பிறந்தார். இவர் கடந்த காலங்களில் பல்வேறு முக்கிய பதவிகளை விகித்துள்ளார். தற்போது தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்து மந்திரியாக இருந்து வந்தார்.

sri lanka,arumugan thondaman death,dmk leader mk stalin,sri lankan president gotabhaya rajapaksa,congress leader ,இலங்கை,ஆறுமுகன் தொண்டமான் மறைவு,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,காங்கிரஸ் தலைவர்

இந்நிலையில், ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகன் தொண்டமான் மறைவு தாங்க முடியாத துயரத்தையும் அதிர்ச்சியையும் தந்ததாகவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் ஸ்டாலின் கூறி உள்ளார்.

இதேபோல் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags :