Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு முழுவதும் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் .. திமுக தலைமை அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் .. திமுக தலைமை அறிவிப்பு

By: vaithegi Wed, 03 May 2023 10:59:47 AM

தமிழ்நாடு முழுவதும் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள்  ..  திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1,222 இடங்களில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவிப்பு ...

இதனை அடுத்து இது பற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான கழக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அரசு ஊழியர் - ஆசிரியர் - மாணவர் - மகளிர் மகளிர் - கழனியில் பாடுபடும் உழவர் -

public meetings,dmk ,பொதுக்கூட்டங்கள்  ,திமுக

ஆலையில் உழைக்கும் தொழிலாளி மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நலன் பேணும் கழக அரசின் - சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகுத் திட்டங்களையும், கழக அரசின் சாதனைகளையும், மக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையில்,

மேலும் தமிழ்நாட்டில் உள்ள 72 கழக மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி ஆகிய அமைப்புகளின் சார்பில் 2023 மே 7,8,9 ஆகிய நாட்களில் "திராவிட மாடல் அரசின் 2ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்" நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :