Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலமைச்சர் தலைமையிலான தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் தேதி மாற்றம்

முதலமைச்சர் தலைமையிலான தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் தேதி மாற்றம்

By: vaithegi Fri, 19 May 2023 1:48:28 PM

முதலமைச்சர் தலைமையிலான  தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் தேதி மாற்றம்

சென்னை: கடந்த மார்ச்சில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் , முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை மக்கள் விழாவாக நாடே திரும்பி பார்க்கும் வகையில் ஜூன் 3 முதல் அடுத்த ஜூன் வரை ஓராண்டு கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அத்துடன் 1 கோடி உறுப்பினர் சேர்க்க உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற மாபெரும் முன்னெடுப்பு தொடங்கப்படவுள்ளது. ஏற்கனவே 1 கோடி உறுப்பினர்களை கொண்ட பேரியக்கத்தில் புதிதாக மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பெரும் முயற்சி ஏப்ரல் 3 முதல் தொடங்கி ஜூன் 3 வரை நடைபெறும் என கூறப்பட்டது.

high level action plan committee meeting,chief minister ,உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்,முதலமைச்சர்

இதையடுத்து இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 21.5.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும்.

அதுபோது உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்." என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக 20ஆம் தேதி தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Tags :