Advertisement

இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது

By: vaithegi Fri, 14 July 2023 09:55:09 AM

இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது

சென்னை: முதலமைச்சர் தலைமையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் ... சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதையடுத்து இதில் திமுகவைச் சோ்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

dmk mps meeting,chief minister , திமுக எம்.பி.க்கள் கூட்டம்,முதலமைச்சர்

அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து எம்.பி.,க்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

அதிலும் குறிப்பாக, ஆளுநர் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகள், பொது சிவில் சட்டம் உட்பட முக்கிய விஷயங்களை எழுப்புவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags :