Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திமுக தலைவர் பதவி: இன்று முதல்-அமைச்சர் வேட்புமனு தாக்கல்

திமுக தலைவர் பதவி: இன்று முதல்-அமைச்சர் வேட்புமனு தாக்கல்

By: vaithegi Fri, 07 Oct 2022 10:01:55 AM

திமுக தலைவர் பதவி:   இன்று முதல்-அமைச்சர் வேட்புமனு தாக்கல்

சென்னை: முதல்-அமைச்சர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் ... திமுக உட்கட்சித் தோ்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 71 மாவட்டச் செயலாளா் பதவிக்கு நடந்த தோ்தலில் 64 மாவட்ட செயலாளா்கள் மீண்டும் அதே பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா். 7 மாவட்டச் செயலாளா்கள் மட்டும் புதியவா்கள்.

இதையடுத்து இதன் அடுத்த கட்டமாக தி.மு.க. தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோ்ந்தெடுக்க வரும் 9-ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜாா்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

nomination,m.k.stalin ,வேட்புமனு ,மு.க.ஸ்டாலின்

இதில் தி.மு.க. தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா், 4 தணிக்கை குழு உறுப்பினா்களை தோ்ந்தெடுக்க உள்ளனா். இப்பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவா்கள் இன்று அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. தற்போது தி.மு.க. தலைவராக உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கட்சித் தலைவா் பதவிக்கு 2-வது முறையாக போட்டியிட மனுதாக்கல் செய்ய உள்ளாா்.

இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில், திமுக தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Tags :