Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய தி.மு.க. கோரிய மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய தி.மு.க. கோரிய மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

By: Karunakaran Tue, 16 June 2020 10:02:38 AM

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய தி.மு.க. கோரிய மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந்தேதி ஓட்டெடுப்பு நடைபெற்றது. அப்போது தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்த 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் பி.தனபாலிடம் தி.மு.க. மனு அளித்தது. ஆனால் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது; சபாநாயகர் முடிவே இறுதியானது என ஐகோர்ட்டு நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

dmk,supreme court,disqualify mla,inquiry , சுப்ரீம் கோர்ட்,திமுக, தகுதி நீக்கம்,விசாரணை

இந்த மேல்முறையீட்டு மனு விசாரணை கடந்த பிப்ரவரி 14-ந்தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றபோது, சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் இந்த மனு செயலற்றதாகிறது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று நீதிபதிகள் கூறி உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு காணொலி காட்சி மூலமாக நடைபெறவுள்ளது.

Tags :
|