Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திமுக இளைஞர் அணி ... நாளை ஆலோசனைக் கூட்டம் .. உதயநிதி ஸ்டாலின் தெரிவிப்பு

திமுக இளைஞர் அணி ... நாளை ஆலோசனைக் கூட்டம் .. உதயநிதி ஸ்டாலின் தெரிவிப்பு

By: vaithegi Sat, 12 Aug 2023 3:13:10 PM

திமுக இளைஞர் அணி ... நாளை ஆலோசனைக் கூட்டம்  .. உதயநிதி ஸ்டாலின் தெரிவிப்பு

சென்னை: அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை இளைஞர் அணி சார்பில் கொண்டாடுதல், இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுப் பணிகள், இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை உள்பட, திமுக இளைஞர் அணி -ன் பல்வேறு ஆக்கப்பணிகள் பற்றி

மாவட்ட - மாநில - மாநகர அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், நாளை மாலை 6.30 மணியளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். என அவர் பதிவிட்டுள்ளார்.

udayanidhi stalin,dmk youth team,consultation meeting ,உதயநிதி ஸ்டாலின் ,திமுக இளைஞர் அணி,ஆலோசனைக் கூட்டம்

இதையடுத்து இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தி.மு.க இளைஞர் அணியின் மாவட்ட – மாநில மாநகர அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில், காணொலிக் காட்சி வாயிலாக, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

எனவே இந்த கூட்டத்தில் கழக இளைஞர் அணியின் மாவட்ட மாநகர - மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். பொருள் : முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை இளைஞர் அணி சார்பில் கொண்டாடுதல், இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுப் பணிகள் மற்றும் இல்லந்தோறும் இளைஞர் அணி. என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :