Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் வாங்காதீங்க... அரசு போக்குவரத்து கழகம் உத்தரவு

ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் வாங்காதீங்க... அரசு போக்குவரத்து கழகம் உத்தரவு

By: Nagaraj Mon, 22 May 2023 6:04:40 PM

ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் வாங்காதீங்க... அரசு போக்குவரத்து கழகம் உத்தரவு

சென்னை: வாங்க வேண்டாம்... அரசுப் பேருந்துகளில் ரூ. 2,000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துநா்களுக்கு அரசுப் போக்குவரத்து கழகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

நாடு முழுவதும் ரூ. 2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசா்வ் வங்கி கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்தது. ரூ.2,000 நோட்டுகள் வைத்திருப்போா், செப்.30-ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

govt bus,conductors,instruction,rs.2 thousand,do not ,அரசு பேருந்து, நடத்துனர்கள், அறிவுறுத்தல், ரூ.2 ஆயிரம், வேண்டாம்

இந்நிலையில், தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துநா்களுக்கு அனைத்து அரசுப் போக்குவரத்து கழகங்களும் அறிவுறுத்தியுள்ளன.

இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வங்கிகளில் குவியும் மக்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

Tags :