Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாண் விளைப்பொருட்களுக்கு விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது; தமிழக அரசு அறிவிப்பு

வேளாண் விளைப்பொருட்களுக்கு விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது; தமிழக அரசு அறிவிப்பு

By: Nagaraj Tue, 02 June 2020 5:01:46 PM

வேளாண் விளைப்பொருட்களுக்கு விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது; தமிழக அரசு அறிவிப்பு

அவசர சட்டம்... வேளாண் விளைப்பொருட்களை விற்கும்போது, விற்பனை கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழநாடு வேளாண் விளைபொருட்கள் , விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987 ல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இதன்படி ,வேளாண் பொருட்களை விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, தமிழகத்தில் உள்ள எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் சந்தைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட கிடங்குகள் மற்றும் குளிர்பதன மையங்களில் விற்பனை செய்வதற்கு வழிவகுக்கும்.

emergency law,agricultural products,newsletter,announcement ,அவசர சட்டம், வேளாண் பொருட்கள், செய்திக்குறிப்பு, அறிவிப்பு

எந்தவொரு சூழ்நிலையிலும், விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யும்போது அவர்களிடம் விற்பனை கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்று அந்த அவசர சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் பரிந்துரை பேரில்,1. தமிழக வேளாண்மை விளைபொருட்கள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1987 ல் சீர்திருத்தங்களை கொண்டு வருதல்; மற்றும்2. விற்பனை குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தினை 29.05.2020க்கு பின்னர் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்தல்.

சீர்திருத்தங்களை உள்ளடக்கிய அவசர சட்டத்தினை கவர்னர் பிறப்பித்துள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :