Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேண்டாம் சீனா உதிரி பாகங்கள்; ரூ.900 கோடி வணிக உடன்பாட்டை முறித்தது ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம்

வேண்டாம் சீனா உதிரி பாகங்கள்; ரூ.900 கோடி வணிக உடன்பாட்டை முறித்தது ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம்

By: Nagaraj Mon, 06 July 2020 09:23:18 AM

வேண்டாம் சீனா உதிரி பாகங்கள்; ரூ.900 கோடி வணிக உடன்பாட்டை முறித்தது ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம்

லடாக் பகுதியில் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து சீனா பொருட்களை புறந்தள்ள வேண்டும் என்று இந்தியா முழுவதும் கோரிக்கைகள் வலுவடைந்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் சீனா பொருட்களை தவிர்த்து வருகின்றன.

அந்த வகையில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், சீன நிறுவனங்களுடனான ரூ.900 கோடி மதிப்பிலான வணிக உடன்பாட்டை முறித்துக் கொண்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் இ சைக்கிள், இ பைக் ஆகியவற்றைத் தயாரிக்க சீன நிறுவனங்களிடம் இருந்து உதிரிப்பாகங்களைக் கொள்முதல் செய்து வந்தது. அடுத்த 3 மாதங்களில் தொள்ளாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதிரிப் பாகங்களைச் சீன நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான ஆர்டர்களை ஏற்கெனவே வழங்கியிருந்தது.

india,imports,china,trade deal,broke ,இந்தியா, இறக்குமதி, சீனா, வணிக உடன்பாடு, முறித்தது

இந்நிலையில் கால்வன் மோதலையடுத்துச் சீன நிறுவனங்களிடம் தொள்ளாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வணிகம் மேற்கொள்ளச் செய்திருந்த உடன்பாடுகளை முறித்துக் கொண்டுள்ளதாக ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத் தலைவர் பங்கஜ் முஞ்சால் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய இருந்த பாகங்களை இனி இந்தியாவிலேயே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|