Advertisement

புலன் விசாரணையை பாதிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம்

By: Nagaraj Sat, 06 Aug 2022 5:07:01 PM

புலன் விசாரணையை பாதிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம்

கடலூர்: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம். புலன் விசாரணையை பாதிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று சிபிசிஐடி வலியுறுத்தி உள்ளது. . தனிநபரோ அல்லது நிறுவனமோ புலன் விசாரணையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், பெரியநெசலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில், அந்தப் பள்ளி வளாகத்தில் கடந்த 13-ம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

videos,inquiry,action,collaboration,information,cbcit ,வீடியோக்கள், விசாரணை, நடவடிக்கை, ஒத்துழைப்பு, தகவல், சிபிசிஐடி

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்று சிபிசிஐடி கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மாணவி மரண வழக்கில் புலன் விசாரணையை பாதிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். வழக்கில் நியாயமான மற்றும் விரிவான புலன் விசாரணை நடைபெற்று வருகின்றது.

விசாரணையை பாதிக்கும் வகையில் காணொளிகளை இணையதளங்களில் வெளியிட வேண்டாம். தனிநபரோ அல்லது நிறுவனமோ புலன் விசாரணையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு தொடர்பாக யாருக்கேனும் தகவல் கிடைத்தால் 90038 48126 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கலாம்.

நீதியை நிலைநாட்டுவதற்கும் நியாயமான விசாரணை மேற்கொள்ளவும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|