Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பண்டிகை காலங்களில் வதந்திகளை பரப்பாதீர்கள்; அமைச்சர் அட்வைஸ்

பண்டிகை காலங்களில் வதந்திகளை பரப்பாதீர்கள்; அமைச்சர் அட்வைஸ்

By: Nagaraj Fri, 06 Nov 2020 6:49:18 PM

பண்டிகை காலங்களில் வதந்திகளை பரப்பாதீர்கள்; அமைச்சர் அட்வைஸ்

தமிழக அரசு விளக்கம்... தீபாவளி பண்டிகையை ஒட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.2000 பணம் வழங்கப்படும் என்று வெளியான தகவல் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் தலைகீழாக மாறியது. பல்வேற் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பெரும்பாலானோரின் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்படவில்லை.

கொரோனா தொற்று பரவல் ஓரளவு குறைந்திருந்தாலும், பண்டிகை காலத்திற்கு பிறகு மீண்டும் பாதிப்பு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போனஸ் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

do not spread rumors,government,diwali,plan ,வதந்தி, அரசு, தீபாவளி, திட்டம், பரப்ப வேண்டாம்

வரும் 14-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பின் போது, அமைச்சரிடம் செய்தியாளர்கள் இந்த தகவல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, தமிழக அரசிடம் அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை. அதாவது தீபாவளிக்கு அரசு ரூ.2,000 வழங்கப் போகிறது என்று வெளியான தகவல் வதந்தி என்றும், பண்டிகை காலங்களில் இதுபோன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags :
|