Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள் - பிரதமர் மோடி

கொரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள் - பிரதமர் மோடி

By: Karunakaran Sun, 21 June 2020 09:56:42 AM

கொரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள் - பிரதமர் மோடி

2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி யோகாயை சர்வதேச அளவில் அனுசரிக்க ஐ.நா-விடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, ஓவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் 6-வது ஆண்டாக இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா காரணமாக வீட்டிலிருந்தே யோகா தினத்தை அனுசரிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, இன்று சர்வதேச யோகா தினம் கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் வீட்டிற்குள் இருந்தே யோகா செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய பிரதமர் டெல்லியில் இருந்தவாறே இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்து யோகா செய்யுங்கள் என்று அவர் கூறினார்.

pm modi,coronavirus,yoga day,yoga at home ,கொரோனா, மோடி, சர்வதேச யோகா தினம்,இந்திய பிரதமர்

பிரதமர் மோடி உரையாற்றிய போது, உங்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக யோகா பழகுங்கள். உலக நாடுகள் ஒன்றுபட வேண்டிய தினம். யோகாவிற்கு மதம், மொழி, இனம் என்ற எந்த பேதம் இல்லை. யோகாவின் பயன்களை முன் எப்போதும் இல்லாத அள்விற்கு நாடு உணர்ந்துள்ளது. கொரோனாவை வீழ்த்த யோக சிறந்த வழிமுறையாக திகழ்கிறது.. கொரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள் என்று கூறினார்.

மேலும் அவர், யோகா உடல் வலிமையுடன் மன வலிமையையும் தருவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாகவும், பகவத் கீதையில் கூட கிருஷ்ணர் யோகவை பற்றி கூறியுள்ளதாகவும் அவர் உரையாற்றினார். சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக யோகா தினம் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags :