Advertisement

மாணவர்களுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா?

By: vaithegi Tue, 02 May 2023 1:54:54 PM

மாணவர்களுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா?

சென்னை: நடப்பு ஆண்டு கோடை விடுமுறையுடன் சேர்த்து மாணவர்களுக்கு 50 க்கும் மேற்பட்ட நாட்கள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .... தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இந்த விடுமுறைக்கு பிறகு புதிய கல்வியாண்டில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் நடப்பு ஆண்டு வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

vacation,school education department ,விடுமுறை ,பள்ளிக்கல்வித்துறை


மேலும் வேலூர், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி வருகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு 30 க்கும் மேற்பட்ட நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.மேலும் அத்துடன் 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் 12 நாட்கள் அரசு விடுமுறை வரவுள்ளது. இவை போக மழைக்காலங்களில் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்கப்படும்.

அதனை தொடர்ந்து மாவட்ட நிகழ்வுகளை பொறுத்து விடுமுறை உள்ளூர் விடுமுறைகள் என்று இந்த ஆண்டில் 50க்கும் மேற்பட்ட நாட்கள் பள்ளி விடுமுறை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வியாண்டு தொடங்கிய பிறகு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

Tags :