Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேசிய ஜனநாயக கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சிகள் எது தெரியுங்களா? உத்தவ் தாக்கரே கிண்டல்

தேசிய ஜனநாயக கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சிகள் எது தெரியுங்களா? உத்தவ் தாக்கரே கிண்டல்

By: Nagaraj Wed, 26 July 2023 7:02:24 PM

தேசிய ஜனநாயக கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சிகள் எது தெரியுங்களா? உத்தவ் தாக்கரே கிண்டல்

மும்பை: மூன்று கட்சிகள்தான் பலம் வாய்ந்தவை... பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பலம் வாய்ந்த கட்சிகள் மூன்றுதான். அமலாக்கத்துறை, இயக்ககம், வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவைதான் அந்த மூன்று கட்சிகள் என்று சிவசேனை உத்தவ் தாக்கரே பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே கிண்டலாக குறிப்பிட்டார்.

சிவசேனை கட்சியின் பத்திரிகை சாம்னாவின் நிர்வாக ஆசிரியர் சஞ்சய் ரெளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் உத்தவ் தாக்கரே இவ்வாறு கூறியுள்ளார். மணிப்பூர் வன்முறை பற்றி மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்கு சென்று பார்வையிடாமல் இருப்பது குறித்தும் அவர் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, தேர்தல் நெருங்கும் போதுதான் தேசிய முன்னணியின் நினைவு பா.ஜ.க.வுக்கு வரும். தேர்தலுக்கு முன்பு தேசிய முன்னணி அரசு என்பார்கள். தேர்ந்தல் முடிந்த பின் மோடி அரசு என்று கூறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

three parties,uddhav thackeray,sarcasm,cow ban law ,மூன்று கட்சிகள், உத்தவ் தாக்கரே, கிண்டல், பசுவதை தடை சட்டம்

சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இதில் 38 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதேநாளில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 26 அரசியல் கட்சித் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில்தான் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு “இந்தியா” என பெயர்சூட்டப்பட்டது.

எதிர்க்கட்சிகளை குறிவைத்து பா.ஜ.க. மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியில் 38 கட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை ஆகிய மூன்று தான் பலம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன. மற்ற கட்சிகள் நிலை என்று கேட்கிறீர்களா? சில கட்சிகளுக்கு ஒரு எம்.பி.க்கள்கூட கிடையாது என்று உத்தவ் தாக்கரே அந்த பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது சிவில் சட்டம் குறித்து தாக்கரே கருத்து தெரிவிக்கையில் முதலில் பா.ஜ.க. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பசுவதை தடை சட்டத்தை கொண்டு வரட்டும் பார்க்கலாம் என்றார்.

Tags :