Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்ற கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என டாக்டர்கள் ஆலோசனை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்ற கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என டாக்டர்கள் ஆலோசனை

By: Karunakaran Fri, 11 Sept 2020 5:56:41 PM

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்ற கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என டாக்டர்கள் ஆலோசனை

பாராளுமன்ற கூட்டம் வருகிற 14-ந்தேதி தொடங்கி வரும் அக்டோபர் 1-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பிரச்சனை அதிகமாகி கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு மத்தியில் பாராளுமன்ற கூட்டம் நடக்கவுள்ளது. இந்நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக பாராளுமன்ற கூட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரு அவைகளும் ஷிப்ட் அடிப்படையில் தனித்தனியாக நடத்தப்படுகின்றன. கொரோனா காரணமாக வயதான எம்.பி.க்கள், ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார். அவர் கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

former prime minister,manmohan singh,parliamentary session,corona virus ,முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், நாடாளுமன்ற அமர்வு, கொரோனா வைரஸ்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முதல் நாள் கூட்டத்தில் மட்டும் பங்கேற்று விட்டு மற்ற கூட்டங்களில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்துள்ளார். இதேபோல மம்தா கட்சியில் மூத்த எம்.பி.க்கள் சிசிர்அதிகாரி, சவுத்ரி மோகன் ஆகியோர்கள் பங்கேற்க மாட்டார்கள் என மம்தா அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் ஏ.கே. அந்தோணிக்கு 79 வயது ஆவதால், அவரும் பங்கேற்க மாட்டார். அதே போல வயலார் ரவிக்கு 83 வயது ஆவதால் அவரும் பங்கேற்கவில்லை.

சோனியாகாந்தி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வதால் அவரும் பங்கேற்கவில்லை. மேல்சபையில் உறுப்பினர்களின் சராசரி வயது 63 ஆக உள்ளது. எனவே பெரும்பாலான உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மற்ற கட்சிகளிலும் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று தெரிகிறது. மக்களவையில் சராசரி வயது 54 ஆக உள்ளதால், அந்த கூட்டத்தில் அதிக உறுப்பினர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.

Tags :