Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதித்து மீண்டு வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் பிளாஸ்மா தானம்

கொரோனா பாதித்து மீண்டு வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் பிளாஸ்மா தானம்

By: Nagaraj Sat, 27 June 2020 4:07:07 PM

கொரோனா பாதித்து மீண்டு வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் பிளாஸ்மா தானம்

பிளாஸ்மா தானம் செய்த மருத்துவர்கள்...மும்பையில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த மருத்துவர்களும், செவிலியர்களும் பிளாஸ்மா தானம் செய்து பலருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் பங்கு போற்றத்தக்கது. தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு, பகல் பாராமல் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா தெரபி பலன் தரும் என கூறுகின்றனர். தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களின் ரத்த பிளாஸ்மாவில் வைரசுக்கு எதிரான ஆண்டிபாடி இருக்கும். அதனை வைத்து இந்த சிகிச்சையை மேற்கொள்கின்றனர்.

plasma donation,doctors,service,nurses ,பிளாஸ்மா தானம், மருத்துவர்கள், சேவை, செவிலியர்கள்

இந்நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பிளாஸ்மாவை தானம் செய்து உதவி வருகின்றனர்.

நோயாளிகளுக்கு பணிவிடை செய்து வந்த அவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகும் உதவி செய்வதை தொடர்கின்றனர் கொரோனாவால் மீண்டு வந்தவர்கள் மத்தியில் பிளாஸ்மா தெரபி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிளாஸ்மா தானம் செய்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தங்களைப் போல மற்றவர்களும் இந்த நோயை எதிர்த்து போராடி வென்று வர வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றி மட்டுமே பிளாஸ்மா தெரபி மேற்கொள்ள வேண்டும். அதே போல் மருத்துவர்களின் அறிவுரைப்படி மட்டுமே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாங்களும் தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகும் மற்றவர்களுக்கு உதவி செய்வது பலரையும் நெகிழ வைத்துள்ளது. அவர்களது சேவையை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags :