Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா படையெடுப்பதால்...... மருத்துவர்கள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா படையெடுப்பதால்...... மருத்துவர்கள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

By: vaithegi Thu, 16 June 2022 4:02:01 PM

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா படையெடுப்பதால்...... மருத்துவர்கள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

தமிழகம் : கடந்த 2 வருட காலமாகவே கொரோனா தொற்று உலகில் உள்ள அனைத்து மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தொற்றால் பல கோடி மக்கள் வரை பெரும் பாதிப்பினை சந்தித்து வருகின்றனர். இதனால் பல லட்ச மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன.

சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில், தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதனால் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் திறக்கப்பட்டது. எவ்வளவு தான் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் முகக்கவசம் மட்டும் கட்டாயமாக்கப்பட்டது. அப்படி முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படுவது ஏன்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் வீரியம் படுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம் கட்டாயம் அணிந்து வந்தால் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

physicians,corona,air travelers ,மருத்துவர்கள்,கொரோனா ,விமான பயணிகள்

விமான நிலையங்களில் ‘நோ மாஸ்க், நோ என்ட்ரி’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அனைவரும் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, விமான பயணிகள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றுகளோடு வந்தால் தான் விமான நிலையத்திற்கு செல்ல முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் முகவரி, போன் நம்பர் உள்ளிட்ட தகவலை கேட்டு குறித்து கொண்டு அனுப்புகின்றன. கொரோனா முதல் அலையின் போது விமான பயணிகள் தவறான போன் நம்பரை கொடுத்து சென்றுள்ளன. பின்னர் இவர்களின் கொரோனா முடிவில் ‘பாசிட்டிவ்’ வந்த பயணிகளை தொடர்பு கொண்டபோது தவறான மொபைல் நம்பர் என தெரியவந்தது. பின்னர் 15 ஆயிரம் மேலான பயணிகள் தவறான தகவல் கொடுத்ததாக தகவல் தெரியவந்தது. அதனால், பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டுகளை அதிகாரிகளே ஆய்வு செய்து எண்களை குறித்து கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளன.

Tags :
|