Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா ‘எச்-3 என்-2’ வைரஸ் வேகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா ‘எச்-3 என்-2’ வைரஸ் வேகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை

By: vaithegi Tue, 07 Mar 2023 12:56:23 PM

தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா ‘எச்-3 என்-2’ வைரஸ் வேகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை: இன்ஃப்ளுயன்சா ‘எச்-3 என்-2’ வைரஸ் வேகமாக பரவி வருகிறது ... தமிழகத்தில் மழைக்காலம் முடிந்து தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டது. அப்படி பருவநிலை மாற்றம் காரணமாக நோய் பாதிப்பும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

இதனை அடுத்து இன்ஃப்ளுயன்சா ‘எச்-3 என்-2’ அதிகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த நோய் பாதிப்பு சிறுவர்களையும், வயதானவர்களையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களையும் பாதிக்கிறது.

doctors,influenza ,மருத்துவர்கள் ,இன்ஃப்ளுயன்சா


மேலும் இந்த காய்ச்சல் 3 வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. ஏ-டைப் லேசான காய்ச்சல், பி-டைப் மிதமான காய்ச்சல், சி-டைப் தீவிரமான காய்ச்சல் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் சாதாரண காய்ச்சல் வந்தாலும் அதன் பின் இருமல், உடல்வலி ஆகிய பாதிப்புகள் வருகிறது. மேலும் இந்த பாதிப்பு 2 வாரங்கள் வரை இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

Tags :