Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேபாளத்தின் 5 மாவட்டங்களில் 150 ஹெக்டேர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதா ?

நேபாளத்தின் 5 மாவட்டங்களில் 150 ஹெக்டேர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதா ?

By: Karunakaran Wed, 04 Nov 2020 08:55:41 AM

நேபாளத்தின் 5 மாவட்டங்களில் 150 ஹெக்டேர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதா ?

நேபாளத்தில் சீனாவின் எல்லையை ஒட்டியுள்ள சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. இந்நிலையில் நேபாளத்தின் 5 மாவட்டங்களில் 150 ஹெக்டேர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து தன் வசமாக்கிக் கொண்டதாக இங்கிலாந்தில் வெளியாகும் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் வெளியாகும் பிரபல நாளிதழில், கடந்த மே மாதத்தில் இருந்து சீனா இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தனது ராணுவத்தை சீனா குவித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

china,150 hectares,5 districts,nepal ,சீனா, 150 ஹெக்டேர், 5 மாவட்டங்கள், நேபாளம்

இந்த செய்தியை சீனா இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், இது முற்றிலும் பொய்யான செய்தி என கூறியுள்ளது. இங்கிலாந்து நாளிதழில் வெளியான செய்திக்கு எந்த ஆதாரமும் இல்லை என சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென் பின் கூறுகையில், இங்கிலாந்து நாளிதழில் வெளியான செய்திக்கு எந்த ஆதாரமும் இல்லை. அது முழுக்க முழுக்க ஆதாரமற்ற செய்தி. வெறும் வதந்தி. குற்றச்சாட்டுகளை முன் வைப்பவர்கள் அதற்கான ஆதாரத்துடன் வரவேண்டும். ஆனால் அப்படி எந்த ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை என்று கூறினார்.

Tags :
|